Swiss News In Tamil

சுவிஸ் நகரம் ஒன்றில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பெண்!

சுவிஸ் நகரம் ஒன்றில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பெண்!

சுவிஸ் நகரம் ஒன்றில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பெண்! சென்ட்காலன் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இனம் பெண் ஒருவர நிர்வாணமாக நின்று கேமராவுக்கு போஸ் கொடுக்கிறாள்.

அவர் ஒரு கருப்பு ஹை ஹீல்ஸ் மட்டுமே அணிந்திருந்தார் அதை தவிர அவரது உடலில் ஒட்டுத்துணி கூட காணப்படவில்லை. வீடியோவின் பின்னணியில் பேருந்து நிலையத்தைக் காணலாம். பலர் அதை கடந்து செல்வதை காணமுடிகிறது. சிலர் செல்போனை எடுத்து வீடியோ எடுப்பதையும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Untitled design 1

இது பற்றி சென்ட்காலன் நகர காவல்துறையிடம் குறித்த ஊடகம் தொடர்புகொண்டு கேட்டபோது ‘ அப்படி ஒரு சம்பவம் எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை- சம்பவம் நடந்த நேரம் தெரியவில்லை. ‘நாங்கள் அப்படி ஏதாவது ஒன்றைக் கண்டறிந்தால், அபராதம் விதிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தினால் யாராவது தீமையை அனுபவித்திருந்தால் குறித்த பெண் அபராதங்களுக்கு உள்ளாவார் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சம்பவம் நடந்த நேரம் அல்லது பெண் பற்றி எதுவும் தெரியாததாலும், சம்பவம் குறித்து யாரும் பொலிஸில் புகார் செய்யாததாலும், இது தொடர்பாக வழக்கு தற்போது தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source:- Fm1Today

Related Articles

Back to top button