Swiss News In Tamil

எச்சரிக்கை : சுவிஸில் வரி திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகள்

எச்சரிக்கை : சுவிஸில் வரி திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகள்

சுவிட்சர்லாந்தில் வரி திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2023 வரி விபரங்களை ஆய்வு செய்தபோது, உங்களது வரிச் செலுத்துகையில் முரண்பாட்டு நிலை காணப்படுவதாகவும் கன்டோன் நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வு இது எனத் தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக 20minuten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது அதிகாரப்பூர்வமாகத் தோன்றினாலும், உண்மையில் மோசடி முயற்சியாகவே இனங்காணப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல், ஃபெடரல் TAX அட்மினிஸ்ட்ரேஷனில் இருந்து வந்தது போல் தோன்றினாலும், பயன்படுத்தப்பட்ட முகவரி “Formstack” என்ற தளத்தில் இருந்து வந்ததெனவும், அனுப்புநர் முகவரி எண்ணிக்கைகள் மற்றும் எழுத்துக்களின் குழப்பமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலளிக்க வேண்டிய முகவரி “noreply@brentfordfc.co.uk” எனும், இங்கிலாந்து காற்பந்து கழகம் ஒன்றின் பெயரை உள்ளடக்கியது. இவ்வகை மோசடிகள், Phishing மோசடிகள் எனப்படுகின்றன.

Phishing என்பது, இணைய பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை (மின்னஞ்சல், வங்கி கணக்கு, கடன் அட்டைகள்) திருடுவதற்காக மர்ம மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கும் மோசடி முறையாகும்.

Phishing Alarm Steuerverwaltung warnt vor gefalschten E Mails 20 Minuten 04 25 2025 01 32 AM

Quishing என்பது, போலியான QR குறியீடுகளை மின்னஞ்சல்கள், போஸ்டர்கள் அல்லது விளக்கப்பதிவுகளில் பயன்படுத்தி, பயனாளர்களை போலியான இணையதளங்களுக்கு வழிமாற்றி, அவர்களிடம் தனிப்பட்ட தகவல்களை திருடும் ஒரு நவீன மோசடி முறையாகும்.

ஃபெடரல் வரித்துறை பேச்சாளர் ஒருவர், இந்த மின்னஞ்சல் SPAM என்றும், இதுவரை ஒரு சம்பவம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதாகக் கூறினார். இருப்பினும், இத்தகைய முயற்சிகள் அடிக்கடி இடம்பெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வகை QR குறியீடு மோசடிகள் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்புக்கான ஃபெடரல் அலுவலகத்தினரும், இத்தகைய போலி மின்னஞ்சல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைக்கின்றன என உறுதிப்படுத்தியுள்ளனர்.

சில மோசடி மின்னஞ்சல்களில் வரி விவர முரண்பாடுகள் குறித்து கூறப்படுகின்றன; சிலவற்றில் வரி திருப்பி வழங்கப்படுவதாகக் கூறி தகவல்களைத் திருட முயல்கின்றனர். St.gallen மற்றும் Basel Kanton காவல்துறைகள், இது ஒரு பழைய மோசடித் திட்டத்தின் மேம்பட்ட வடிவம் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

20min.ch

Related Articles

Back to top button