Swiss News In Tamil

கன்டோன் Zug இல் முகமூடி கொள்ளையர்கள் திருட்டு முயற்சி

கன்டோன் Zug இல் முகமூடி கொள்ளையர்கள் திருட்டு முயற்சி இன்று வியாழக்கிழமை அதிகாலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

சுக் கன்டோனில் உள்ள ஆபரணக்கடை ஒன்றினுள் மூகமூடி அணிந்து கொள்ளையர்கள கடையின் யன்னலை சுத்தியால் அடித்து உள்நுழையும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

wppi image polizei news© Zuger Polizei 20 940x550 1
ஆதாரம்: Zug போலீஸ்
அட்டைப் படம்: குறியீட்டு படம் © Zug போலீஸ்

அவர்களின் முயற்சி தோல்வியில் முடிவடைய மூவரும் அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அதிகாலை 2:45 அளவில் இடம்பெற்றுள்ளது.

எனினும் சம்பவம் அறிந்து சுக் கன்டோனல் போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதிகாலை 3: 15 அளவில் சுவைஸ் கன்டோனில் வைத்து 3 நபர்களுடன் சந்தேகத்துக்கிடமான கார் ஒன்று நிறுத்தப்பட்டது.

உடனடியான மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சுக் கன்டோனல் போலீசாரிடம் ஒப்படைந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் 30 மற்றும் 36 வயதுடைய மூன்று ரோமானியர்கள் ஆவர். தற்போது அவர்கள் காவல் நிலையத்தில் விசாரணைக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுக் கன்டோன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: Zug போலீஸ்
அட்டைப் படம்: குறியீட்டு படம் © Zug போலீஸ்

Related Articles

Back to top button