Swiss News In Tamil

சூரிச் உட்லிபெர்க் சுரங்கப்பாதையில் தீப்பற்றிய கார்.!!

சூரிச் உட்லிபெர்க் சுரங்கப்பாதையில் கார் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

சூரிச்சிலுள்ள உட்லிபெர்க் சுரங்கப்பாதையில் தனது காரின் எஞ்சின் பெட்டியில் புகை வருவதை கார் டிரைவர் கவனித்தார். டிரைவர் உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி தனது வாகனத்தை விட்டு வெளியேறினார்.

சிறிது நேரத்தில் வாகனம் எரியத் தொடங்கியது. ஓட்டுநர் சுரங்கப்பாதையை விட்டு கால்நடையாக வெளியே சென்றுள்ளார். தீயினால் கடும் புகை மூண்டதால், உட்லிபெர்க் சுரங்கப்பாதையை இரு திசைகளிலும் மூட வேண்டியதாயிற்று. தீயணைப்பு துறையினர் இரு முனைகளிலும் தீயை அணைத்து, நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

சூரிச் கன்டோனல் போலீஸ்
ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ் பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுரங்கப்பாதை மூடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துப்புரவுப்பணிகளுக்குப் பிறகு, சுரங்கப்பாதை மதியம் 2:30 அளவில் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டன.

வாகனம் தீப்பிடித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் பயணிகள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. சுரங்கப்பாதையும் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் சேதத்தை சந்தித்தது.

தீ விபத்துக்கான சரியான காரணம் இப்போது சூரிச் கன்டோனல் காவல்துறையின் தீயணைப்பு விசாரணை சேவையின் நிபுணர்களால் விசாரிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளின்படி, தொழில்நுட்பக் குறைபாட்டின் காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்
பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்

Related Articles

Back to top button