Swiss News In Tamil

கன்டோன் ஊரி : தவறி விழுந்து விபத்துக்குள்ளானவர் காயம்.!

கன்டோன் ஊரியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிந்த ஒரு தொழிலாளி தவறிவிழுந்து படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று, புதன்கிழமை, பிப்ரவரி 7, 2024, மதியம் 2 மணிக்கு சற்று முன்பு, ஊரி- ஆல்ட்டோர்ஃபில் உள்ள கட்டுமான தளத்தில் ஏற்பட்டுள்ளது.

கன்டோன் ஊரி

விபத்தின் போது, ​​48 வயதான ஒரு தொழிலாளி மரப்பலகை ஒன்றில் இருந்து சுமார் 1.5 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சிறிய காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் அவசர சேவைகளால் உரி கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related Articles

Back to top button