Swiss News In Tamil

ஜெனீவா – சூரிச் விமான சேவைக்கு எதிர்ப்பு : வெளியான புதிய தகவல்

சுவிட்சர்லாந்தின் இரண்டு பெரிய நகரங்களான சூரிச் மற்றும் ஜெனீவா இடையேயான 30 நிமிட விமான சேவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும், முற்றிலும் ரயில் சேவையால் மாற்றப்பட வேண்டும் என்றும் பலமுறை புகார்கள் எழுந்துவந்தது.

எனினும் இந்த சேவையை கைவிடும் திட்டம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இல்லை என தற்போது அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில்

‘பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தை எங்கள் நெட்வொர்க்குடன் சிறந்த முறையில் இணைக்க விரும்புகிறோம்’ என்று சுவிஸ் விமான நிறுவனத்தின் தலைவர் ஒரு நேர்காணலில் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நாளைக்கு பல முறை இயக்கப்படும் இந்த விமானம், சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியைச் சேர்ந்த பயணிகளுக்காக சூரிச்சில் உள்ள சர்வதேச விமானங்களுடன் இணைக்கப்பட்டு சிறப்பான சேவையை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button