Swiss News In Tamil

வலாய்ஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் பலி.!

சுவிட்சர்லாந்தின் வலாய்ஸில் செவ்வாயன்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இறந்த மூன்று பேரில் விமானி மற்றும் மலை வழிகாட்டி ஒருவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் விபத்துக்குள்ளானது என கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவர் சியோனில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்றாவது நபரும் பின்னர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணத்தை தெளிவுபடுத்த சுவிஸ் பாதுகாப்பு புலனாய்வு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்தில் ஏற்கனவே இரண்டு ஹெலிகாப்டர் விபத்துக்கள் வலாய்ஸில் நிகழ்ந்துள்ளன. பெப்ரவரி நடுப்பகுதியில், நியோக் பகுதியில் விமானத்தில் தனியாக இருந்த ஒரு விமானி விபத்துக்குள்ளாகி காயமடைந்தார்.

மார்ச் நடுப்பகுதியில், Vétroz நகராட்சியில் உள்ள பயிற்சி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இருவரில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button