Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் ஈஸ்டர் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் ஈஸ்டர் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிப்பு ஈஸ்டர் போக்குவரத்து நெரிசல்கள் சுவிட்சர்லாந்தின் அதிவேக நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக எதிர்வுகூறல் நேற்றையதினமே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நெஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அதிகரிப்பு

நேற்று வியாழன் மதியம் ஒரு மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் பயணங்கள் தாமதமாகியதை தொடர்ந்து இன்று ஓரளவுக்கு நிலமை சரியாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோட்தார்ட்டைச் சுற்றியிருந்த வாகன நெரிசல் சிறிது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ2 நெடுஞ்சாலையில் வழக்கமhக ஏற்படும் நெரிசல்களுக்கு மாற்றாக, சுவிட்சர்லாந்தின் ஏ 13 மற்றும் சான் பெர்னாண்டினோ சுரங்கப்பாதையைப் பயன்படுத்த சுவிட்சர்லாந்தின் டூரிங் கிளப் பரிந்துரைத்துள்ளது.

தெற்கே இத்தாலியை நோக்கி செல்லும் பாதைகள் அதிக ட்ராஃபிக்கைக் காணக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button