Swiss News In Tamil

சுவிஸில் டிக்டாக் செயலிக்கு அடிமையாகும் இளையோர்கள்.!!

உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகவலைத்தளமான டிக்டாக் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

பலர் குறித்த செயலி மூலம் சமூக சீர்கேடுகளுக்கு ஆளாவதாக குறிப்பிட்ட சில நாடுகள் இந்த செயலியினை தடைசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் மேலைத்தேய நாடுகளில் பலரும் இதற்கு அடிமையாகும் போக்கு காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக சுவிட்சர்லாந்திலும் டிக்டாக் செயலிக்கு பலர் அடிமையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டிக்டாக் அடிமைகளுக்காக சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் டிக்டாக் செயலிக்கு அடிமையாகும் இளையோர்கள்.!!

வளர்ந்து வரும் தேவையை எதிர்கொண்டு, சமூக ஊடகங்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கான ஸ்தாபனம் கன்டோன் பேர்னில் திறக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் இப்படி ஒரு ஸ்தாபனம் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சூரிச்பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 12 முதல் 19 வயதுடையவர்களிடையே டிக்டாக் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றாகும். சிலர் உளவியல் உதவி தேவைப்படும் அளவுக்கு இந்த செயலிக்கு அடிமையாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button