Swiss News In Tamil
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிட்சர்லாந்தில் கவனயீர்ப்பு போராட்டம்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிட்சர்லாந்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று நான்காம் திகதி மதியம் 2 மணி தொடக்கம் 6 மணி வரை ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒன்று கூடிய சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






