Swiss News In Tamil
சூரிச் Bürkliplatz இல் விபத்து, பாரிய போக்குவரத்து நெரிசல்
சூரிச் நகரில் இருகார்கள் மற்றும் ட்ராமுக்கு இடையிலான விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சூரிச் புர்க்லிப்ளாட்ஸ் அருகே இடம்பெற்றுள்ளது.
இரண்டு கார்கள் மற்றும் ஒரு டிராம் இடையே குறித்த விபத்து ஏற்பட்டது. இதன்போது ஒருவர் லேசான காயம் அடைந்தார்.

விபத்து காரணமாக, புர்க்லிப்ளாட்ஸைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 3: 45 அளவில் மீண்டும் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





