Swiss News In Tamil

சுவிஸில் முழு நேர பணியாளர்களுக்கு வரிச் சலுகை ?

சுவிஸில் முழு நேர பணியாளர்களுக்கு வரிச் சலுகை ? சுவிட்சர்லாந்தில் முழு நேரப் பணியாளர்களுக்கு வரிச் சலுகை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் இது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பகுதி நேர பணியாளர்களை விடவும் முழு நேரப் பணியாளர்களுக்கு வரிச் சலுகை வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

tax planning concept with wooden cubes calculator blue table flat lay 176474 9519

சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ஊழியப் படை பற்றாக்குறை நிவர்த்தி செய்யவும், வெளிநாட்டு பணியாளர்களில் தங்கி வாழ்வதனை குறைக்கவும் இந்த நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த வரிச் சலுகையினால் ஆண்கள் நன்மை அடையக் கூடும் எனவும் இதனால் பால்நிலை சமத்துவம் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரிச் சலுகை யோசனையின் நன்மை தீமைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்ட்ரா கரோனி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button