Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வீட்டுக்குள் நடமாடிய மர்ம நபர் : பெண் அதிர்ச்சி.!!

சுவிட்சர்லாந்தில் வீட்டுக்குள் நடமாடிய மர்ம நபர் : பெண் அதிர்ச்சி.!! சுவிஸ் மாகாணத்தில் பணியிலிருந்த பெண்ணொருவருக்கு, அவரது பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து வந்த அழைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் நடமாடிய நபர்

சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்திலுள்ள Lachen என்னுமிடத்தில் வாழும் பெண்ணொருவர், இரவு ஷிஃப்டில் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார்.

5c2d284501c0ea0ff07f7304

அப்போது, அவரது பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் யாரோ நடமாடுவதாக அவர் கூற, இந்தப் பெண் உடனே பொலிசாரை அழைத்து தகவல் கொடுத்திருக்கிறார்.

வீட்டுக்குள் கண்ட காட்சி

அந்த வீட்டுக்கு விரைந்த பொலிசார், வீட்டிலிருந்த ஒரு ஆணைக் கைது செய்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த அந்த பெண், தன் வீட்டில் கைது செய்யப்பட்ட அந்த நபர், தன் வீட்டு சமையலறையில் பாஸ்தா சமைத்து சாப்பிட்டுவிட்டு, குளியலறையில் ஒரு குளியலும் போட்டிருப்பதை அறிந்துகொண்டுள்ளார்.

அத்துடன், அந்த நபர் வீட்டையும் குப்பைக்கூளமாக்கிப் போட்டு விட்டதாக தெரிவித்துள்ள அந்த பெண், அந்த வீட்டில் தான் மட்டும் தனியாக வாழ்வதாகவும், இப்படி தான் இல்லாதபோது ஒரு ஆண் வீட்டுக்குள் நுழைந்துள்ள விடயம் தன்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அந்த நபர் வீடற்றவர் என்றும், அவரிடம் சுத்தமாக பணமே இல்லையென்றும் கூறியுள்ள பொலிசார், அவர் 60 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button