Swiss News In Tamil

சுவிஸ் கல்வி முறை குறித்து மக்கள் திருப்தி

சுவிஸ் கல்வி முறை குறித்து மக்கள் திருப்தி நாட்டின் கல்வி முறைமை குறித்து சுவிட்சர்லாந்து மக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்து பகுதிகளில் 82 வீதமானவர்கள் பாடசாலைகள் தொடர்பில் திருப்தியை வெளியிட்டுள்ளனர்.

சுவிஸ் கல்வி முறை

ஜெர்மனிய மொழி பேசும் பிராந்தியத்தில் 79 வீதமானவர்களும், ரோமன் மொழி பேசும் 72 வீதமானவர்களும் திருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் அநேக பகுதிகளில் பாடசாலைகள் தொடர்பில் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த கருத்துக்கணிப்பு 57 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button