Swiss News In Tamil
கன்டோன் ஊரி : தவறி விழுந்து விபத்துக்குள்ளானவர் காயம்.!
கன்டோன் ஊரியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிந்த ஒரு தொழிலாளி தவறிவிழுந்து படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று, புதன்கிழமை, பிப்ரவரி 7, 2024, மதியம் 2 மணிக்கு சற்று முன்பு, ஊரி- ஆல்ட்டோர்ஃபில் உள்ள கட்டுமான தளத்தில் ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது, 48 வயதான ஒரு தொழிலாளி மரப்பலகை ஒன்றில் இருந்து சுமார் 1.5 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சிறிய காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் அவசர சேவைகளால் உரி கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.





