Swiss Information

தலை சுற்ற வைக்கும் சுவிசின் வித்தியாசமான சட்டங்கள்…

“ஞாயிற்றுக்கிழமை ஆனா பாட்டில் தூக்கிப் போடக்கூடாது! காரில் சாவியை மறந்து வச்சா உங்களுக்கே ஃபைன்! நாய் வளர்த்தா டாக்ஸ் கட்டணும்! என்னப்பா சொல்றீங்க… கேட்கவே விசித்திரமா இருக்கா?
ஹலோ மக்களே! உங்க ஊர்ல ஹெல்மெட் போடலனா ஃபைன் போடுவாங்க. ஆனா, சுவிட்சர்லாந்துல மக்களோட அமைதிக்கும், ஏன்… விலங்குகளோட மன நலனுக்கும் என்ன மாதிரியான வித்தியாசமான சட்டமெல்லாம் இருக்கு தெரியுமா? வாங்களேன் பார்க்கலாம்!”
இதெல்லாம் சுவிசில இருக்கிறவங்களுக்கு தெரிஞ்ச விசயமாக இருக்கலாம். ஆனால் சுவிசுக்கு புதுசா வந்திருக்கிறவங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டுமே என்டுதான் இந்த வீடியோ…
1. “சிங்கிளா வாழத் தடை!” – விலங்குகள் நலச் சட்டம்
“சுவிஸ்ல கினியா பன்றி (Guinea pig), கிளி இல்ல தங்க மீன் வளர்க்க ஆசைப்பட்டா, கண்டிப்பா ஜோடியா தான் வாங்கணும்! ஏன்னா, அங்க உள்ள சட்டப்படி இந்த விலங்குகள் கூட்டமா வாழக்கூடியவை. இவற்றைத் தனியா வளர்த்தா அதுங்களுக்கு டிப்ரஷன் வந்துருமாம்! ‘தனிமை கொடுமை சார்’னு சட்டம் போட்டு வச்சிருக்காங்க.”
Happiest Swiss Cow
2. நிர்வாண மலையேற்றத்திற்குத் தடை! (Naked Hiking Ban)
“அழகான சுவிஸ் மலைகள்ல டிரெக்கிங் போறது பலரோட ட்ரீம். ஆனா, அங்க ஆடை எதுவும் இல்லாம ‘நேக்கட் டிரெக்கிங்’ போகவே கூடாது! சில வருடங்களுக்கு முன்னாடி சுவிஸின் அப்பேன்செல் (Appenzell) பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் இப்படி நிர்வாணமா நடக்க ஆரம்பிக்க, அரசு உடனே ஸ்பெஷல் சட்டம் போட்டு அதைத் தடை பண்ணிடுச்சு.”
3. ஞாயிற்றுக்கிழமை “சைலன்ஸ்” ப்ளீஸ்!
“ஞாயிற்றுக்கிழமை வந்தா ஜாலியா காரைக் கழுவலாம், வீட்டு வாசல்ல புல் வெட்டலாம்னு நினைச்சா அபராதம் தான்! அன்னைக்கு அண்டை வீட்டாருக்கு எந்தச் சத்தமும் வரக்கூடாது. ஏன்… ரீசைக்கிளிங் பின்னுல கண்ணாடி பாட்டிலைப் போட்டாக்கூட சத்தம் வரும்னு, ஞாயிற்றுக்கிழமை பாட்டில் போடக்கூட தடை!”
4. குழந்தை பெயர் வைப்பதில் செக்!
“உங்க குழந்தைக்கு உங்களுக்குப் புடிச்ச என்ன பேரையும் வச்சுட முடியாது. பிராண்ட் பெயர்கள் (உதாரணத்திற்கு ‘Chanel’ அல்லது ‘Porsche’) அல்லது குழந்தைக்கு எதிர்காலத்தில் அவமானத்தை ஏற்படுத்தும் பெயர்களை வைத்தால், சுவிஸ் அரசு அந்தப் பெயரை நிராகரித்து விடும்!”
5. இரவு 10 மணிக்கு மேல ‘பிளஷ்’ பண்ணக் கூடாது?
“இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ‘அமைதி நேரம்’. பல பழைய அபார்ட்மெண்டுகள்ல இரவு 10 மணிக்கு மேல டாய்லெட் பிளஷ் (Toilet Flush) பண்ற சத்தம் பக்கத்து வீட்டுக்காரருக்கு இடையூறா இருக்கும்னு ஹவுசிங் ரூல்ஸ் வச்சிருக்காங்க. அதேபோல இரவு நேரத்துல வீட்ல சத்தமா ஹை-ஹீல்ஸ் (High Heels) போட்டு நடக்கவும் தடை!”
6. கார் சாவியை மறந்தா ஃபைன்!
“காரை பார்க் பண்ணிட்டு, சாவியை உள்ளேயே மறந்து வச்சுட்டுப் போனா, திருடனைத் தேடுறதுக்கு முன்னாடி காரோட ஓனருக்குத் தான் ஃபைன் போடுவாங்க. ‘திருடனுக்கு நீங்களே ஆசையைக் காட்டி வழிவகுத்துக் கொடுத்தீங்க’னு அபராதம் போட்டுருவாங்க!”

சரி வாங்க விடயம் தெரியாமல் சுவிசில் மாட்டிக்கொண்ட சிலர் அபராதம் செலுத்திய சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஷாஃப்ஹவுசனில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது விழுந்து விலா எலும்பு முறிந்தார். இருப்பினும், அவர் அடைந்த காயங்களுக்கு அனுதாபத்திற்குப் பதிலாகஇ கன்டோனல் அதிகாரிகள் அந்த நபரை “தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்காக” 150 ஃபிராங்க் அபராதம் விதித்தனர். அவர் விழுந்ததால் ஷாஃப்ஹவுசனின் குடியிருப்பாளர்கள் அல்லது உள்கட்டமைப்புக்கு சேதம் அல்ல. ஆனால் அவர் அபராதத்தை செலுத்த மறுத்ததால், அந்த சுற்றுலா பயணிக்கு இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்த அந்த சுற்றுலாப்பயணி சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு சரிபட்டுவராது என்பது போல கருத்து தெரிவித்திருந்தார்.

சுவிசில் வேகமாக கார் ஓட்டினால் கடுமையான அபராதம் விதித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் மெதுவாக கார் ஓட்டியதற்காக ஒரு வயோதிபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா.? செங்குத்தான மலைப்பாதையில் காரை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றதாக 66 வயது ஓட்டுநரை பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்குத்தானஇ மலைப்பாதையில் இருந்து குறித்த கார் கீழே வரும் வரை காத்திருந்த போலீசார் அவர் கீழே இறங்கியதும்இ மிக மெதுவாக வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு 780 பிராங்க் அபராதம் விதித்தனர். இதைப்பார்த்து குழம்பிப்போன முதியவர் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரியவருகின்றது. இதுபற்றி குறிப்பிட்ட அவர் “இந்த உலகில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை” என்று பெர்ன்னில் உள்ள அந்த குடியிருப்பாளர் கருத்து தெரிவித்தார் .

ஒரு நிமிடம் தாமதமாக ரயில் டிக்கெட் வாங்கியதற்காக ஓய்வூதியதாரர் ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றுள்ளது. 72 வயதான இவர், ஆர்காவ் மாகாணத்தில் உள்ள லென்ஸ்பர்க்கிலிருந்து ஹன்சென்ச்வில் வரை ரயிலில் சென்றார். அவர் ஏறும் முன் ஆன்லைனில் டிக்கெட் வாங்க விரும்பினார், “அவர் முகமூடி இணிந்திருந்மையினால் தொலைபேசி முதலில் என்னை அடையாளம் காணவில்லை, பின்னர் எனது கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்திருந்தது இதனால் நேரவிரயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

ரயில் புறப்பட்ட ஒன்றரை நிமிடத்திற்குப் பிறகே அவரால் பயணச்சீட்டை ஆன்லைனில் வாங்கமுடிந்தது. ஆனால் அவரது டிக்கெட்டை சரிபார்த்த பிறகு, அந்த நபர் ரயிலில் ஏறுவதற்கு முன் கட்டணத்தை செலுத்தாததற்காக 90 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டார்.

அவர் 57 ஆண்டுகளாக சுவிஸ் ஃபெடரல் ரயில்வேயின் (SBB விசுவாசமான வாடிக்கையாளராகவும், சீசன் டிக்கெட் வைத்திருப்பவராகவும் இருப்பதால் நிலைமை மேலும் முரண்பாடான ஒன்றாக மாறியது. இருப்பினும் ஓய்வூதியம் பெறுபவர் இந்த சம்பவத்தை ஒரு நல்ல முன்னேற்றமாக எடுத்துக் கொண்டார்.

சைக்கிள் ஓட்டிகள் சைக்கிள் பெடலில் இருந்து காலை எடுத்தால் 20 பிராங் அபரதம் விதிக்கப்படுகிறது. இப்படியொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பான சைக்கிள் ஓட்டுதலின் நலன்களுக்காக, சைக்கிள் ஓட்டுபவர்கள் எப்போதும் தங்கள் கால்களை பெடல்களில் வைத்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்கு ஊர்கு 20 அபராதம் விதிக்கப்படும் . மணி அடிக்கத் தவறினாலும் அபராதமும் விதிக்கப்படலாம். நீங்கள் மின்-பைக்கில் இருந்தால், எல்லா நேரங்களிலும் உங்கள் விளக்குகளை எரியவில்லை என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – இது பகலில் கூட இடம்பெறலாம் எனவே கொஞ்சம் கவனமாகவே சைக்கிள் ஓட்டுங்கள்..

“என்ன மக்களே… இந்தச் சட்டங்கள்ல உங்களுக்கு பிடிச்ச சட்டம் எது என்பதையும் இன்னும் எதுக்கெல்லாம் புதுசா சட்டம் போட்டால் நல்லா இருக்கும் என்பதையும் மறக்காம கமண்ட்ல சொல்லிட்டு போங்க…