Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் 3 வது மாடியில் இருந்து குதித்த யாழ் இளம் யுவதி.!!

சுவிட்சர்லாந்தில் 3 வது மாடியில் இருந்து குதித்த யாழ் இளம் யுவதி.!! சுவிட்சர்லாந்தில் பாசல் நகரில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளம்தில் வைரல் ஆகி வருகிறது.

யாழில் வசித்து வரும் முன்னாள் போராளி ஒருவரின் 19 வயது பெண்ணை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு நபர் திருமணம் செய்வதாகச்சொல்லி ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

Screenshot 2023 10 17 204602

அங்கு சென்று சில நாட்களில் குறித்த பெண்ணை அவரது கணவன் உட்பட கணவனின் தகப்பனார் தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிய வருகிறது. சுவிசுக்கு சென்று 3 மாதங்களாக இது நடந்துள்ளதாக அவரது தாயார் கண்ணீர் மல்ல காணொளி வெளியிட்டுள்ளார்.

ஒரு கண்ணை இழந்த நிலையில் குறித்த பெண் போராளியின் காணொளி இன்று சமூக வலைத்தளங்களில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கணவன் உட்பட மாமனாரின் கொடுமை தாங்காத இளம் பெண் மாடியில் இருந்து குதித்து கால் மற்றும் முள்ளந்தண்டு முறிந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களை அவரது தாயார் காணொளி மூலம் விபரித்துள்ளார். முன்னாள் போராளிகளையும் முன்னாள் போராளிகளின் பெண் பிள்ளைகளையும் ஒரு சில புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு சீரழித்து வருகின்றமை அண்மைக்காலமாக தொடர்ந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.

https://youtu.be/y4pwke-yAaI

Related Articles

Back to top button