“மொழித்தடை காரணமாக நடந்ததா தாக்குதல்? சூரிச் பொலிஸ் அதிகாரி நீதிமன்றில்!”
“மொழித்தடை காரணமாக நடந்ததா தாக்குதல்? சூரிச் பொலிஸ் அதிகாரி நீதிமன்றில்!”

“மொழித்தடை காரணமாக நடந்ததா தாக்குதல்? சூரிச் பொலிஸ் அதிகாரி நீதிமன்றில்!”
35 வயதான சூரிச் நகர பொலிஸ் அதிகாரி ஒருவர், காவலில் இருந்த ஒருவரை அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்தி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கைது செய்யப்பட்ட ஒருவரை பொலிஸ் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக அரசு தரப்பு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் கைகள் முதுகுக்குப் பின்னால் கைவிலங்கிடப்பட்டிருந்ததாகவும், அவர் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதன்பின்னர், பொலிஸ் அதிகாரி அவரது தலையை சுவரில் மோதியதுடன், விலா பகுதியில் குத்தி, தலையின் பின்புறத்திலும் காலால் தாக்கியதாக அரசு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், மொழித்தடை காரணமாக வழங்கப்பட்ட உத்தரவை உடனடியாகப் பின்பற்றாத நிலையில், அவரது காலில் உதைத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரி சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
👉 இது உண்மையில் அதிகார துஷ்பிரயோகமா? நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது?





