“நான் மாஃபியா இல்லை!” – நீதிமன்றத்தில் அதிர வைத்த என்ட்ராங்கெட்டா குற்றச்சாட்டு!
“நான் மாஃபியா இல்லை!” – நீதிமன்றத்தில் அதிர வைத்த என்ட்ராங்கெட்டா குற்றச்சாட்டு!

“நான் மாஃபியா இல்லை!” – நீதிமன்றத்தில் அதிர வைத்த என்ட்ராங்கெட்டா குற்றச்சாட்டு!
“நான் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவன் அல்ல!” – பெல்லின்சோனாவில் நடந்த கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்ற விசாரணையில் 59 வயது பிரதிவாதி அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள கலாப்ரியன் ‘என்ட்ராங்கெட்டா’ அமைப்புக்கு பல ஆண்டுகளாக தளவாட மற்றும் நிதி உதவி செய்ததாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், 13 லட்சம் சுவிஸ் பிராங்குக்கும் அதிகமான பணத்தை இத்தாலிக்கு எடுத்துச் சென்றதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நீதிமன்றத்தில் அனைத்தையும் மறுத்த அவர், மாஃபியா தலைவருடன் நட்பு இருப்பதை மட்டும் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளை, முக்கிய சாட்சிகள் குறித்து “அவர்கள் பொய் சொல்கிறார்கள்!” என கடுமையாகக் கூறியுள்ளார்.
மேலும், சில அச்சுறுத்தல்களை விடுத்ததாக ஒப்புக்கொண்டாலும், யாரையும் கொலை செய்ததில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா? அல்லது பிரதிவாதியின் மறுப்பே நீதிமன்றத்தில் ஏற்கப்படுமா? தொடர்ந்த விசாரணைகளில்தான் முழு உண்மை வெளியாகும்.






