“பயங்கரவாதமா? பழிவாங்கலா? ஆராவ் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து 3 கோணங்கள்!”
“பயங்கரவாதமா? பழிவாங்கலா? ஆராவ் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து 3 கோணங்கள்!”

“பயங்கரவாதமா? பழிவாங்கலா? ஆராவ் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து 3 கோணங்கள்!”
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில், ஆர்காவ் பந்தய மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் முடிவுக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான இத்தாலியப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி ஆரம்பத்தில் தெளிவாக இல்லாததால், ஆர்காவ் மாகாண காவல்துறை “சிறப்புச் சூழ்நிலை” என அறிவித்து, மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தது.

பயங்கரவாதம், வன்முறைக் கலவரம் அல்லது குற்ற உலகிற்குள் இடம்பெற்ற பழிவாங்கல் உள்ளிட்ட மூன்று கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
கனரக ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் களமிறக்கப்பட்டதுடன், சாலைகள் மூடப்பட்டு வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
மேலும், தேடுதல் நடவடிக்கை ஆர்காவைத் தாண்டி சுவிட்சர்லாந்து முழுவதும் முன்னெடுக்கப்பட்டதுடன், ஜெர்மன் காவல்துறையும் இதில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 43 வயதான சுவிஸ் நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் முக்கிய கேள்வி இன்னும் உள்ளது…
👉 இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான காரணம் என்ன? ‘சிறப்புச் சூழ்நிலை’ எப்போது முடிவடையும்?





