மின்சாரக் காரில் திடீர் தீ! கட்டிடமே புகைமூட்டம் – 50 பேர் வெளியேற்றம்!
மின்சாரக் காரில் திடீர் தீ! கட்டிடமே புகைமூட்டம் – 50 பேர் வெளியேற்றம்!

மின்சாரக் காரில் திடீர் தீ! கட்டிடமே புகைமூட்டம் – 50 பேர் வெளியேற்றம்!
சுவிட்சர்லாந்தின் கோசாவுவில் தரைக்கீழ் வாகன நிறுத்துமிடத்தில் மின்சாரக் கார் ஒன்று திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது! 🔥🚗
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.15 மணியளவில், விலெர்ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடத்தின் underground parking-ல் இருந்து தீ எச்சரிக்கை கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், கட்டிடத்தில் இருந்த சுமார் 50 பேரை உடனடியாக வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சுமார் 35 தீயணைப்பு வீரர்கள் இணைந்து மின்சாரக் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் அந்த வாகனம் தரைக்கீழ் பார்க்கிங்கில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, கட்டிடத்திற்கு வெளியே குளிர்விக்கப்பட்டு, சிறப்பு கொள்கலனில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சொத்து சேதம் பல இலட்சம் சுவிஸ் பிராங்குகள் என முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மிக முக்கியமான கேள்வி — இந்த மின்சாரக் கார் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? 🔥
அதற்கான பதிலை கண்டறிய செயின்ட் கேலன் மாகாண காவல்துறையின் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





