Swiss Information

உயிருடன் உள்ள எலிகளை மாற்றும் “மெய்நிகர் எலி” உருவாக்கம் : சுவிஸ் ஆராய்ச்சியாளர்களின் புதிய முயற்சி

உயிருடன் உள்ள எலிகளை மாற்றும் “மெய்நிகர் எலி” உருவாக்கம் : சுவிஸ் ஆராய்ச்சியாளர்களின் புதிய முயற்சி

சுவிஸ் ஆராய்ச்சியாளர்களின் புதிய AI முயற்சி: உயிருடன் உள்ள எலிகளை மாற்றும் “மெய்நிகர் எலி” உருவாக்கம்

சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் உயிருடன் உள்ள ஆய்வக எலிகள் மீது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான “மெய்நிகர் எலி” மாதிரியை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பம் மருந்து ஆய்வுத் துறையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய ஆய்வு நிறுவனம் (Empa) வெளியிட்ட தகவலின்படி, புதிய செயற்கை நுண்ணறிவு முறைமையின் மூலம் புதிய மருந்து செயற்பாட்டு பொருட்களின் தாக்கங்களை கணினி வழியாக மதிப்பிட முடியும். இதன் மூலம் உயிரினங்கள் மீது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை குறைக்க உதவுமென நம்பப்படுகிறது.

N10 7

குறிப்பாக, குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட நானோ துகள்கள் (Nanoparticles) மனித உடலின் பல பகுதிகளில் எவ்வாறு பரவுகின்றன என்பதை இந்த AI மாதிரி கணக்கிடுகிறது. மூளைக் கட்டி (Brain Tumour) சிகிச்சைகளுக்கான புதிய மருந்துகளை உருவாக்குவதில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஏனெனில், சில நானோ துகள்களுக்கு இரத்தம் மற்றும் மூளை இடையிலான பாதுகாப்பு தடையை (Blood-Brain Barrier) கடந்து செல்லும் திறன் உள்ளது. இதனால் மருந்துகளை நேரடியாக மூளைக்குள் கொண்டு செல்லும் சிகிச்சை முறைகளை ஆராய்வதில் இந்த தொழில்நுட்பம் உதவக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மருந்து உருவாக்கத் துறையில் பாதுகாப்பான மற்றும் வேகமான முடிவுகளை எடுக்க இந்த AI முறைமை எதிர்காலத்தில் முக்கிய தீர்மான உதவிக் கருவியாக அமையும் என்றும் Empa ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.  KeystoneSDA

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button