Local Swiss News

50,000 சுவிஸ் பிராங்குகள் சேதம்! தொழில்நுட்பக் கோளாறால் எரிந்த சரக்கு வாகனம்!

50,000 சுவிஸ் பிராங்குகள் சேதம்! தொழில்நுட்பக் கோளாறால் எரிந்த சரக்கு வாகனம்!

50,000 சுவிஸ் பிராங்குகள் சேதம்! தொழில்நுட்பக் கோளாறால் எரிந்த சரக்கு வாகனம்!

சுவிட்சர்லாந்தின் ராப்பர்ஸ்வில்-ஜோனா, செயின்ட் கேலன் மாகாணத்தில், நேற்று காலை ஒரு சரக்கு விநியோக வேன் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 14ஆம் தேதி காலை சுமார் 9 மணி 15 நிமியளவில், சூரிச்சர்ஸ்ட்ராஸ் சாலையில் ஒரு விநியோக வேன் தீப்பிடித்து எரிவதாக அவசர சேவைகளுக்கு பல தகவல்கள் கிடைத்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், முழுவதும் எரிந்து கொண்டிருந்த வாகனத்தை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ அருகிலிருந்த கட்டிடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.

15J 2

வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சுமார் 50 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து ஏற்படும் முன்பே ஓட்டுநர் வாகனத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீயணைப்பு பணிகளின்போது சூரிச்சர்ஸ்ட்ராஸ் சாலை சுமார் 20 நிமிடங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது.

மேலும், வாகனத்திலிருந்து கசிய்ந்த எண்ணெய் கழிவுநீர் அமைப்புக்குள் கலந்ததால், அதை அகற்ற சிறப்பு உறிஞ்சும் வாகனமும் பயன்படுத்தப்பட்டது.

இந்த தீ விபத்துக்கான காரணமாக தொழில்நுட்பக் கோளாறு இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், சரியான காரணத்தை கண்டறிய செயின்ட் கேலன் மாகாண காவல்துறையின் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button