Local Swiss News

க்ரூஸ்லிங்கனில் பரபரப்பு! ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து தீ விபத்து – சந்தேக நபர் சிக்கினார்!

க்ரூஸ்லிங்கனில் பரபரப்பு! ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து தீ விபத்து – சந்தேக நபர் சிக்கினார்!

க்ரூஸ்லிங்கனில் பரபரப்பு! ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து தீ விபத்து – சந்தேக நபர் சிக்கினார்!

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாகாணத்தில் உள்ள க்ரூஸ்லிங்கன் பகுதியில், ஒரே இரவில் இரண்டு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெர்மனியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் சம்பவம், அதிகாலை 1 மணி 50 நிமிடங்களளவில், டேகர்விலன்–கோட்லீபன் Tägerwilen-Gottliebenரயில் நிலையத்தில் பதிவாகியது. அடையாளம் தெரியாத பொருள் ஒன்று தீப்பிடித்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அதன்பின், அதிகாலை 4 மணி 30 நிமிடங்களுக்கு, க்ரூஸ்லிங்கன் நகர ரயில் நிலையத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, SBB ஊழியர் ஒருவர் தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

15J 8

அதே நேரத்தில், ரயிலில் இருந்து இறங்க மறுத்த ஒருவரைப் பற்றிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 63 வயதான ஜெர்மன் நபர் இந்த இரு தீ சம்பவங்களுடனும் தொடர்புடைய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த தீ விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. தீ விபத்துகளின் உண்மையான காரணமும், சந்தேக நபரின் தொடர்பும் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button