Swiss News In Tamil

Coop இல் அதிக பொருட்கள் கொள்வனவு செய்பவர்கள் Self-checkout செய்ய தடை

Coop இல் அதிக பொருட்கள் கொள்வனவு செய்பவர்கள் Self-checkout செய்ய தடை

சுவிஸில் பிரபலமான சூப்பர் மார்க்கெட்களிலொன்றான கோப் (Coop) தற்போது ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இனிமேல் முஅதிகமாக பொருட்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்கள் Self-checkout counter களில் பொருட்களை ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியாது.

இந்த மாற்றம் முக்கியமாக பீக் நேரங்களில் ஏனைய வாடிக்கையாளர்கள் அதிகம் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்க மேற்கொள்ளப்படுகிறது. பலரும் ஒரே நேரத்தில் அதிக பொருட்களை தனியாக ஸ்கேன் செய்து செலுத்தும் போது, மற்றவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக கோப் விளக்குகிறது.

Self-checkout

இருப்பினும், Passabene என்ற மொபைல் அல்லது ஹேண்ட் ஸ்கேன் முறையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் — அவர்கள் ஷாப்பிங் செய்வதற்கேற்ப பொருட்களை ஏற்கனவே ஸ்கேன் செய்து வைக்கும் முறையை பின்பற்றுவோர் பொருட்கள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும்  தொடர்ந்தும் Self-checkout பகுதிகளை பயன்படுத்தலாம்.

ஏனையவர்கள் நேரடியாக Counter செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.. இது மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வேகமான மற்றும் எளிதான ஷாப்பிங் அனுபவம் வழங்கப்படுவதை கோப் இலக்காகக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button