Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மாரடைப்பு தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

சுவிட்சர்லாந்தில் மாரடைப்பு தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நாளை நவம்பர் 28ம் திகதி இடம்பெறவிருக்கிறது. நமது இதயம் ஒரு சாதாரண உறுப்பு அல்ல. நம் உடலின் உறுப்புகளிற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்குவதன் மூலம் அது நாம் உயிர் வாழ்வதற்கான முக்கியத்துவத்தைத் தருகிறது.

எனவே, இந்தப் பொக்கிஷமான உறுப்பைப் பாதுகாப்பதும் இதயநோய்களில் இருந்து முற்பாதுகாப்புடன் வாழ்வதும் மிக முக்கியம்.

ஏன் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும்?

இந்த நிகழ்வு “ஆரோக்கியம்” என்ற அமைப்பின் மருத்துவ- உளவியல் நிபுணர்களால் நடாத்தப்படுகிறது. அவர்கள் மாரடைப்பு தொடர்பான சிக்கலான விடயங்களை உங்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறுவார்கள். இதில் மருத்துவத் தகவல்களுடன் விரிவான விளக்கங்கள், மற்றும் உளவியல் விளைவுகள் ஆகியவற்றை இயல்பான முறையில் விரிவுரையாக்குவார்கள்.

சுவிட்சர்லாந்தில்

இந்த நிகழ்வு எம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் நடக்கிறது. இதன் மூலம் உங்களிற்கும் உங்கள சக குடும்பத்தினர் அனைவரிற்கும் உள்ளடக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.

நம் இதயத்தை “கோவிலாக” மதித்து அதை ஆரோக்கியமாகப பேணுவதைக் கற்றுக்கொள்ளவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும் குறித்த இலவச கருத்தரங்கிற்கு அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கிறார்கள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான ஆரோக்கியம் அமைப்பினர்.

Related Articles

Back to top button