ஞாயிற்றுக்கிழமைஇ அக்டோபர் 20, 2024 அன்று, சொலுத்தூர்ன் கன்டோன் Hochwald உள்ள ஒரு குடும்ப வீட்டில் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது;. ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024 அன்று, மாலை சுமார் 4:45 மணியளவில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசார் தெரிவிக்கின்றனர். Hochwald மற்றும் Dornach தீயணைப்பு துறையினர் தீயை கண்டுபிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சொலுத்தூர்ன் கன்டோனல் பொலிஸாரின் விசாரணையில், தரைத்தளத்தில் உள்ள விளக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அதிகளவில் புகை மூட்டம் உருவானது. ஒற்றைக் குடும்பம் உள்ள வீடு தற்போதைக்கு வாழத் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த சொத்துக்களும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (c) Kapo SO