லுசேர்ன் நகரில் மாநகர பேரூந்து விபத்து..!!!
லுசேர்ன் நகரில் மாநகர பேரூந்து விபத்து - 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
லுசேர்ன் நகரில் மாநகர பேரூந்து விபத்து..!!! இன்று புதன்கிழமை காலை லூசர்னில் மாநகர பேருந்து விபத்துக்குள்ளானது. லுசேர்ன்னின் ஓபர்க்குறூன்ட-த்ராஸாவில் (Obergrundstrasse) காலை 7.30 அளவில் பேரூந்துடன் டெலிவரி வேன் மோதியதினால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
எனினும் பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் பின்னர் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்மைகள் ஆராயப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் சுமார் நான்கு மணி நேரம் ஓபர்க்குறூன்ட-திராச (Obergrundstrasse) மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்தினால் சுமார் 70000 பிராங்குகளின் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: Lucerne Police Image source: Lucerne Police






