Local Swiss News

கோவிட் நிதி வாங்கி ஈவுத்தொகை அறிவிப்பு… 76 ஆயிரம் பிராங்கை திருப்பிக் கொடுக்க உத்தரவு!

கோவிட் நிதி வாங்கி ஈவுத்தொகை அறிவிப்பு... 76 ஆயிரம் பிராங்கை திருப்பிக் கொடுக்க உத்தரவு!

கோவிட் நிதி வாங்கி ஈவுத்தொகை அறிவிப்பு… 76 ஆயிரம் பிராங்கை திருப்பிக் கொடுக்க உத்தரவு!

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் கன்டோனில் கோவிட் உதவித்தொகை தொடர்பாக முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிலையான செலவுகளுக்காக 76 ஆயிரத்து 172 சுவிஸ் பிராங்குகள் நிதி உதவி பெற்ற ஒரு நிறுவனம், தற்போது அந்த முழுத் தொகையையும் அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம், 2024 டிசம்பரில் 50 ஆயிரம் பிராங்குகளை ஈவுத்தொகையாக வழங்க முடிவு செய்தது. பின்னர் அந்த முடிவை ரத்து செய்து, எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை என்று நிறுவனம் விளக்கம் அளித்தது.

ஆனால், கோவிட் உதவித்தொகை பெற்ற நிறுவனங்கள், குறிப்பிட்ட மூன்று ஆண்டுக் கட்டுப்பாட்டு காலத்தில் ஈவுத்தொகை வழங்கவோ அல்லது அதற்கான முடிவை எடுக்கவோ கூடாது என்பது சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஈவுத்தொகை வழங்க முடிவு செய்ததே சட்ட மீறலாகும் என்று ஆர்காவ் நிர்வாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

1a 9

நிறுவனம் கணக்கியல் துறையில் ஏற்பட்ட பணியாளர் மாற்றம் காரணமாகவே இந்த தவறு நிகழ்ந்ததாக வாதிட்டது. ஆனால், பின்னர் அந்த முடிவை ரத்து செய்தாலும், சட்ட மீறல் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதால் அதை பின்னோக்கி திருத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், 76 ஆயிரத்து 172 சுவிஸ் பிராங்குகளை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், கூடுதலாக 6,100 சுவிஸ் பிராங்குகள் நீதிமன்றச் செலவையும் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவிட் நிதி உதவிகளைப் பெற்ற நிறுவனங்கள், அரசின் நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button