கொலை நடந்த இடத்தில் சிக்கிய தடயங்கள்! CCTV மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்!
கொலை நடந்த இடத்தில் சிக்கிய தடயங்கள்! CCTV மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்!

கொலை நடந்த இடத்தில் சிக்கிய தடயங்கள்! CCTV மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்!
சூரிச்சில் மதுபான விடுதி ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 53 வயதான ஹங்கேரிய நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், அவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சிறைத் தண்டனையை முடித்த பின்னர், அவர் 12 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்றப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இடம்பெற்றது. லாங்ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள ‘லுகானோ பார்’ மதுபான விடுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் ஏழு முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

குற்றத்தை 53 வயதான நபர் மறுத்து வந்த நிலையில், நீதிமன்றம் முக்கியமான ஆதாரங்களை முன்வைத்துள்ளது.
CCTV காணொளிகள் மூலம் அவரது நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதுடன், அது அவரது தொலைபேசி எண்ணுடனும் தொடர்புபடுத்தப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், காணொளியில் அவர் அணிந்திருந்ததாகக் காணப்பட்ட ஆடைகளும் அவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபடியே விசாரணையைப் பின்தொடர்ந்தார்.
எனினும், இந்தத் தீர்ப்பு இன்னும் சட்டப்பூர்வமாக இறுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





