Swiss News In Tamil

“சுவிஸ் இராணுவம் சுவிஸ் உணவை வாங்காதா?”… நாடாளுமன்றத்தில் கடும் சர்ச்சை!

29j 7777

“சுவிஸ் இராணுவம் சுவிஸ் உணவை வாங்காதா?”… நாடாளுமன்றத்தில் கடும் சர்ச்சை!

சுவிஸ் இராணுவ வீரர்களுக்கான உணவுப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்திருப்பது தற்போது நாட்டில் கடும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 18.5 மில்லியன் சுவிஸ் ஃபிராங்குகள் மதிப்பிலான முக்கிய உணவு வழங்கல் ஒப்பந்தத்தை, எஸ்டோனியாவைச் சேர்ந்த Kommivabrik OÜ நிறுவனத்திற்கு இராணுவ கொள்முதல் நிறுவனம் Armasuisse வழங்கியுள்ளது.

தரம் மற்றும் விலை ஆகிய இரு அளவுகோள்களிலும் அந்த நிறுவனம் அதிக மதிப்பெண் பெற்றதால், சர்வதேச டெண்டர் நடைமுறையின் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “சுவிஸ் இராணுவம், சுவிஸ் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

29j 7777

இதற்கு முன்பும், இராணுவத்திற்கான ஆப்பிள் சாஸ் இத்தாலியிலிருந்து வாங்கப்பட்டதாக வெளியான தகவல் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போதைய பொதுக் கொள்முதல் சட்டங்களும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளும் காரணமாகவே இத்தகைய ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்கின்றன என்றும், அந்த சட்டங்களை மாற்ற நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம், சுவிஸ் விவசாயம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் அரசாங்க கொள்முதல் கொள்கைகள் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *