சுவிஸை உலுக்கிய பாலியல் கொடூரம்… 400 பேர் தெருவில் இறங்கி நீதி கோரி போராட்டம்!
சுவிஸை உலுக்கிய பாலியல் கொடூரம்... 400 பேர் தெருவில் இறங்கி நீதி கோரி போராட்டம்!

சுவிஸை உலுக்கிய பாலியல் கொடூரம்… 400 பேர் தெருவில் இறங்கி நீதி கோரி போராட்டம்!
சுவிட்சர்லாந்தில் முன்னாள் எஸ்விபி அரசியல்வாதி பேட்ரிக் ஃப்ரை தொடர்பான பாலியல் வன்முறை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்காவ் மாகாணத்தின் அன்டர்சிகெந்தால் கிராமத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக சுமார் 400 பேர் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த வழக்கில், 57 வயதான முன்னாள் அரசியல்வாதி, ஒரு தாய், அவரது சிறுமியான மகள் மற்றும் மற்றொரு பெண்ணுக்கு ரகசியமாக மயக்க மருந்து வழங்கி, பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அந்தச் செயல்களை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தாயும் அவரது மகளும் பேரணியில் கலந்துகொண்டபோது, அங்கிருந்த மக்கள் நீண்ட நேரம் கைதட்டி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். “எங்களுக்கு பணம் தேவையில்லை… நேரமும் நீதியும் வேண்டும்” என்று அந்தத் தாய் உருக்கமாகக் கூறினார்.
இந்த வழக்கில் பல கொலை முயற்சி, கடுமையான பாலியல் வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது தொடர்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்குமா என்பது சுவிட்சர்லாந்து முழுவதும் கவனிக்கப்பட்டு வருகிறது.






