ஒரு கிளிக் போதும்… உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில்! காவல்துறை எச்சரிக்கை!
ஒரு கிளிக் போதும்... உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில்! காவல்துறை எச்சரிக்கை!

ஒரு கிளிக் போதும்… உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில்! காவல்துறை எச்சரிக்கை!
உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது…”
“உங்கள் பொதியை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை…”
“உடனடி நடவடிக்கை தேவை…”
இவ்வாறான அவசர உணர்வை ஏற்படுத்தும் செய்திகள் மூலம், மோசடி செய்பவர்கள் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிப்பதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஸூக் காவல்துறை, சமீப காலங்களில் உண்மையான நிறுவனங்களின் செய்திகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து மக்களை எச்சரித்துள்ளது.
இந்த செய்திகளில் வரும் இணைப்புகளை திறந்தால், பயனாளர்களின் கடவுச்சொற்கள், வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் அல்லது SMS-களில் உள்ள இணைப்புகளை சிந்திக்காமல் கிளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், எந்த ஒரு நிறுவனமும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி இணைப்புகள் மூலம் உங்கள் கடவுச்சொல் அல்லது உள்நுழைவு தகவல்களை கேட்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சந்தேகம் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணை பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சிறிய கவனக்குறைவு கூட பெரிய தரவு இழப்பை ஏற்படுத்தலாம்… எனவே, எந்த செய்தியையும் நம்பும் முன் சரிபார்ப்பது மிகவும் அவசியம் என காவல்துறை தெரிவித்துள்ளது.





