Local Swiss News

நீண்ட ஆயுள்… ஆனால் பணப் பற்றாக்குறை! முதியோருக்கு HSLU வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

நீண்ட ஆயுள்... ஆனால் பணப் பற்றாக்குறை! முதியோருக்கு HSLU வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

நீண்ட ஆயுள்… ஆனால் பணப் பற்றாக்குறை! முதியோருக்கு HSLU வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் 65 வயதில் ஓய்வு பெறுபவர்கள், தங்களின் நிதித் திட்டத்தை சராசரி ஆயுட்காலத்தை மட்டும் வைத்து கணக்கிடக்கூடாது என்று லூசெர்ன் பயன்பாட்டு அறிவியல் மற்றும் கலைப் பல்கலைக்கழகம், HSLU, புதிய ஆய்வில் எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வின்படி, இன்றைய தலைமுறையில் பலர் ஓய்வுக்குப் பிறகு 25 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வாழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், முதுமைக் காலத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, 65 வயதான பெண்களில் சுமார் பாதி பேர் 90 வயது வரை வாழக்கூடும். ஆண்களில் பாதி பேர் 87 வயதையும் எட்டக்கூடும்.

இதன் விளைவாக, ஓய்வூதியம், அரசின் AHV உதவி மற்றும் பிற வருமானங்கள் மட்டும் போதாமல் போகும் சூழல் உருவாகலாம்.

7J 9

உதாரணமாக, நடுத்தர வருமானம் கொண்ட ஒருவர் 85 வயது வரை வாழ்ந்தால் சுமார் 7 லட்சத்து 28 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் கூடுதலாக தேவைப்படலாம். 90 வயது வரை வாழ்ந்தால் இந்தத் தொகை 9 லட்சத்து 21 ஆயிரம் சுவிஸ் பிராங்குகளாக உயரும். 100 வயது வரை வாழும் ஒருவர் சுமார் 13 லட்சத்து 20 ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை தனது சேமிப்பு அல்லது கூடுதல் வருமானத்தின் மூலம் ஈடு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

மேலும், வயது அதிகரிக்கும் போது மருத்துவம், பராமரிப்பு மற்றும் வீட்டு வசதிக்கான செலவுகளும் அதிகரிக்கும் என்பதால், நிதிச் சுமை மேலும் உயரும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, இளமையிலிருந்தே தனிப்பட்ட சேமிப்பு, முதலீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமிடலைத் தொடங்குவது மிகவும் அவசியம் என்று HSLU நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button