சுவிட்சர்லாந்து உண்மையில் நடுநிலை அல்ல! – தைவான் துணை அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!
சுவிட்சர்லாந்து உண்மையில் நடுநிலை அல்ல! – தைவான் துணை அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!

சுவிட்சர்லாந்து உண்மையில் நடுநிலை அல்ல! – தைவான் துணை அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!
சுவிட்சர்லாந்தின் நடுநிலை கொள்கை குறித்து தைவானின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஃபிரான்சுவா சி-சுங் வூ வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
RSI-க்கு அளித்த பேட்டியில், “சுவிட்சர்லாந்து தன்னை நடுநிலை நாடு என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் அது முழுமையான நடுநிலை அல்ல. சீனாவுடன் அதிகாரப்பூர்வமாக பேசும் சுவிட்சர்லாந்து, தைவானுடன் அதே வகையில் தொடர்பு கொள்ளவில்லை” என்று அவர் விமர்சித்துள்ளார்.

1950 முதல் சுவிட்சர்லாந்து ஒரே-சீனக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இதன்படி, சீன மக்கள் குடியரசை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, தைவானுடன் தூதரக உறவை வைத்திருக்கவில்லை.
இதுகுறித்து மேலும் பேசிய வூ, “உண்மையான நடுநிலை என்றால் இரு தரப்பிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தற்போது சுவிட்சர்லாந்து சீனாவுக்கு அதிக நெருக்கமாக இருப்பதாகவே தெரிகிறது” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், “தைவானில் சுவிட்சர்லாந்துக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எங்கள் நாட்டை ஆசியாவின் சுவிட்சர்லாந்து என்று கூட அழைக்கிறோம். அதேபோல் சுவிஸ் மக்களும் தைவானை அதிகம் அறிந்து மதிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
இந்தக் கருத்துகள் சுவிஸ் அரசியலிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சில அரசியல்வாதிகள் நடுநிலைக் கொள்கையை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில், மற்றவர்கள் சீனாவுடன் பொருளாதார உறவை பாதிக்காமல், தைவானுடனும் பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவிஸின் நடுநிலைக் கொள்கை குறித்து இந்த விவாதம் அடுத்த கட்டத்தில் எவ்வாறு நகரும் என்பது தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





