Swiss News In Tamil
St.Gallen SG : A1 நெடுஞ்சாலையில் விபத்து
St.Gallen SG: A1 நெடுஞ்சாலையில் விபத்து.!! இன்று காலை 10.45 அளவில் சென்ட்காலன் கன்டோன் ஏ 1 நெஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
27 வயதான ஓட்டுனரே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில் கார் சறுக்கியமையால் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கார் மற்றும் வீதியில் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: Kapo St.Gallen
பட ஆதாரம்: Kapo St.Gallen






