Local Swiss News

ஷாப்பிங் மையத்தில் துணிகர கொள்ளை முயற்சி: பிரெஞ்சு குடிமக்கள் கைது… தீவிர விசாரணை!

ஷாப்பிங் மையத்தில் துணிகர கொள்ளை முயற்சி: பிரெஞ்சு குடிமக்கள் கைது... தீவிர விசாரணை!

ஷாப்பிங் மையத்தில் துணிகர கொள்ளை முயற்சி: பிரெஞ்சு குடிமக்கள் கைது… தீவிர விசாரணை!

சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணம், ஸைஸர்ஸ் Zizers பகுதியில் உள்ள லேண்ட்குவார்ட் ஃபேஷன் அவுட்லெட் ஆடை விற்பனை நிலையத்தில் Einbruch im Landquart Fashion Outletநடைபெற்ற கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி, அதிகாலை 1 மணிக்கு முன்பாக, ஆடைக்கடையில் திருட்டு நடைபெற்று வருவதாக கிராபுண்டன் மாகாண காவல்துறையின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர தகவல் கிடைத்தது.

16J 4
Foto

தகவல் கிடைத்த உடனேயே, பல காவல்துறை ரோந்து குழுக்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்தன. உடனடியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு பிரெஞ்சு குடிமக்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கொள்ளை எவ்வாறு திட்டமிடப்பட்டது? மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணையை கிராபுண்டன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து மாகாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் கொள்ளையர்களின் நோக்கம் குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் மிக விரைவாகச் செயல்பட்டு சந்தேக நபர்களைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button