Swiss News In Tamil

பெரிய இணைய தளங்கள் மீதான கட்டுப்பாட்டை ஒத்தி வைத்த சுவிஸ் அரசு

பெரிய இணைய தளங்கள் மீதான கட்டுப்பாட்டை ஒத்தி வைத்த சுவிஸ் அரசு

பெரிய இணைய தளங்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு மீண்டும் ஒரு முறை தள்ளிப் போட்டுள்ளது. உலக வணிகத்தில், குறிப்பாக அமெரிக்காவுடன் உள்ள வரிக்கட்டு முரண்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன், Google, Facebook, YouTube, X போன்ற பெரிய இணைய தளங்களை வரையறுக்கும் சட்ட வரைவு பற்றி ஆலோசனை தொடங்க சுவிட்சர்லாந்தின் மத்திய அரசு முடிவு செய்தது.

2024 மார்ச் மாதத்திற்குள் அதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை பலமுறை இந்த முடிவு தள்ளிப் போடப்பட்டு வருகிறது. அண்மையில், 2025 ஜனவரி மாத இறுதியில், “இந்த விவகாரம் பிந்தய திகதிதியில் அரசு ஆலோசிக்கப்படும்” என்று மத்திய அரசின் செயலாளர் அறிவித்திருந்தார்.

Adllins Media Social Marketing Platforms

அதேபோன்று, 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி புதன்கிழமையன்று, இந்த விவகாரம் மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், தீர்மானம் எடுக்காமல், வழக்கம்போல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக அரசின் செய்தித்தொடர்பாளர் உர்சுலா எகன்பெர்கர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் நிலவும் வரி மோதல் தள்ளிப் போக்கும் காரணமா?

அதிகாரபூர்வமாக எந்த காரணமும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், உள்ளக வட்டார தகவல்களின்படி, அமெரிக்காவுடன் தற்போது நிலவி வரும் வரிக்கட்டு மற்றும் வர்த்தக முரண்பாடுகளே இந்த தீர்மான தாமதத்திற்கு காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் எந்தவொரு விவரத்தையும் தற்போது வழங்க முடியாது. முடிவு எடுக்கப்பட்ட பின் மட்டுமே தகவல் தர இயலும்,” என அரசாங்கம் தெரிவித்தள்ளது.

2023 ஏப்ரலில் அரசின் தொடக்க அறிவிப்பின்படி, பெரும் தகவல் தொடர்பு தளங்களையும் தேடல் இயந்திரங்களையும் கட்டுப்படுத்தி, பயனாளிகளுக்கு அதிக உரிமைகள் வழங்கும் புதிய சட்டம் சுவிட்சர்லாந்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில், அந்த சட்ட முன்மொழிவு எப்போது உருவாகும் என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படவில்லை.

(c) Tamilnews

Related Articles

Back to top button