Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து முழுவதும் பல வாரங்களுக்கு பிறகு தணிந்த வெப்பம்.!!

சுவிட்சர்லாந்து முழுவதும் பல வாரங்களுக்கு பிறகு தணிந்த வெப்பம்.!!

சுவிட்சர்லாந்து முழுவதும் கடந்த சில நாட்களில் கடும் வெப்பம் நிலவியிருந்த நிலையில், இப்போது வானிலை சிறிது மாறி, சில நாட்களுக்கு குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான சூழ்நிலை காணப்படுகிறது.. குறிப்பாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சில பகுதிகளில் மழையுடனும் மேகமூட்டத்துடனும் குளிர்ச்சியான காலநிலை அனுபவிக்கப்பட்டது. வெப்பநிலை 17°C முதல் 20°C வரை குறைந்தது.

வானிலை ஆய்வுக் கண்காணிப்பு மையமான SRF Meteo வழங்கும் தகவலின்படி, வியாழக்கிழமை ஜூலை 10 முதல் மீண்டும் கோடைக்கால வெப்பம் திரும்பத் தொடங்கும். வானம் பெரும்பாலும் சூரிய ஒளியுடன் தெளிவாக இருக்கும். வெப்பநிலை தினசரி உயரத் தொடங்கும். வியாழக்கிழமை 25°C, வெள்ளிக்கிழமை 27°C, மற்றும் ஞாயிறு அன்று 30°C வரை உயரும் என கணிக்கப்படுகிறது.

News fur die swisstamil24

மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கும். ஞாயிறு அன்று மட்டும் மிதமான மழைச்சூழ்நிலை உருவாகக்கூடும். ஆனால் பெரும்பாலான நாட்களில் வறண்ட சூழ்நிலை நீடிக்கும். இரவுப் பொழுதுகளில் வெப்பநிலையும் உயரவிருப்பதால், வெப்பச்சுமை அதிகமாக உணரப்படும்.

குடிநீர், தலைக்கவசம், சன்ஸ்கிரீன், மற்றும் குளிர்ச்சியான உடைகள் ஆகியவை அவசியம். குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெளியில் வேலை செய்யும்வர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சிறந்த சுற்றுலா மற்றும் வெளி நடவடிக்கைகள் மேற்கொள்ள வார இறுதியில் உகந்த காலநிலை அமையும். ஏரிகளில் குளிக்க, சவாரி செய்ய, அல்லது குடும்பத்துடன் வெளியே செல்ல திட்டமிட இதுவே சிறந்த நேரமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button