Swiss News In Tamil

சுவிஸில் குற்றம் புரிந்த அகதிகளை நாடு கடத்த புதிய சட்டம்

சுவிஸில் குற்றம் புரிந்த அகதிகளை நாடு கடத்த புதிய சட்டம்

குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அகதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் குற்றவாளிகளை நாடுகடத்தும் புதிய கடுமையான சட்டங்களை அமல்படுத்த சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அகதிகள் மற்றும் குடியுரிமை அனுமதி பெற்றவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களை தானாகவே நாடு கடத்த வேண்டும் என்ற சட்ட முன்மொழிவிற்கு 30-10 வாக்குகள் என்ற அடிப்படையில் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

சுவிஸில்
Keystone-SDA

அகதிகள் மீது குற்ற விசாரணை தொடங்கும் நேரத்திலேயே, அவர்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற சட்ட முன்மொழிவும் 28-11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், எல்லையில் முறையாக சோதனை மேற்கொள்வதை கட்டாயமாக்கும் திட்டம் 20-17 வாக்குகள்  வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் மத்திய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுவிஸ் மக்களின் வெளிநாட்டவர்களைக் குறித்த பார்வை மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button