Swiss News In Tamil

சூட்கேசில் போதைப்பொருள் கடத்திய பெண் சூரிச்சில் கைது.!!

சூட்கேசில் போதைப்பொருள் கடத்திய பெண் சூரிச்சில் கைது.!!

சூட்கேசில் போதைப்பொருள் கடத்திய பெண் சூரிச்சில் கைது.!! நேற்று வியாழக்கிழமை சூரிச் விமானநிலையத்தில் போதைப்பொருள் கொண்டுசென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது  பொதிகளில் சுமார் ஆறு கிலோகிராம் கோகோயின் மறைத்து எடுத்துச்செல்லும் போதே போலீசாரின் சோதனையில் சிக்கி குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கொரியராக செயல்பட்டு வந்த பெண், பிரேசிலின் சாவோ பாலோவில் இருந்து சூரிச் சென்று லண்டனுக்கு தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள்

போக்குவரத்து பயணிகளின் வழக்கமான லக்கேஜ் சோதனையின் போது, ​​அவரது சூட்கேஸின் அடிப்பகுதியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் சுமார் ஆறு கிலோகிராம் கொக்கைன் இருந்தது.

கைது செய்யப்பட்ட பெண் 23 வயதான பிரேசில் பிரஜை ஆவார். காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட பின்னர், அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்காக அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சர்வதேச விமான நிலையங்களில் நடந்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லைகள் வழியாக சட்டவிரோதமான பொருட்களை கடத்துவதை தடுக்க அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

(c) Kantonspolizei Zürich

Related Articles

Back to top button