Swiss News In Tamil

சுவிஸில் ஒருவரை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை.!!

சுவிஸில் ஒருவரை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை.!!

சுவிட்சர்லாந்தில் இனி Stalking  எனப்படும் “ஒருவரை பின்தொடர்ந்தலோ அல்லது தொந்தரவு செய்தாலோ”  தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படும் என நாடாளுமன்றம் ஜூன் 20 வியாழக்கிழமை தீர்மானித்துள்ளது. இதுவரை, இத்தகைய நடவடிக்கைகள் சட்டப்படி சிவில் வழக்குகள் (civil cases) என வகைப்படுத்தப்பட்டு வந்தன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை சட்டபூர்வமாகக் கடுமையாக எதிர்கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை.

புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், “அதிகமானளவு தொடரும் தொந்தரவு” (obsessive harassment) என்பது இனி குற்றவியல் சட்டத்தில் (Criminal Code) சேர்க்கப்படும். இதன் மூலம் குற்றம் செய்யும் நபர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உருவாகிறது.

இந்த தீர்மானம், பல ஆண்டுகளாக பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு  அமைவாக மாற்றப்பட்டுள்ளது.. பலர் தொடர்ந்து எதிர்பார்த்த ஒரு முக்கியமான சட்ட மாற்றமாக இது கருதப்படுகிறது.

Stalking

இதன் முக்கிய நோக்கங்கள்:

  • பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான பாதுகாப்பு வழங்குவது
  • சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தடுப்பது
  • தொடர்ந்து பயமுறுத்தும், தனிப்பட்ட விடயங்களில் குறுக்கிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, ….. போன்றவை காணப்படுகிறது.

இதுவரை, சுவிட்சர்லாந்தில் Stalking ஒரு குற்றவியல் குற்றமாக கருதப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், சிவில் வழியில்” (Civil way) மட்டுமே உரிமைகளை எதிர்கொள்ள முடிந்தது. அதிலும், சட்ட நடைமுறைகள் சிக்கலானதும், நேரம் பிடிக்கும் வகையிலும் இருந்தது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய இந்த சட்ட மாற்றத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் நேரடியாக புகார் கொடுத்து, குற்றவாளிக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கலாம். இது சட்டம், பாதுகாப்பு மற்றும் நீதிக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த புதிய சட்டம் சுவிட்சர்லாந்தில் பெண்கள் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான சமூகத்தைக் உருவாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அரசு கூறியுள்ளது.

Related Articles

Back to top button