Swiss News In Tamil
ஏரியில் தவறி விழுந்த விழுந்த பெண்ணுக்கு மாரடைப்பு
ஏரியில் தவறி விழுந்த விழுந்த பெண்ணுக்கு மாரடைப்பு
ஏரியில் தவறி விழுந்த விழுந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஞாயிற்றுக்கிழமை டெசினோ மகாணாத்தின் மாகியோர் ஏரியில் விழுந்து ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார்.
கன்டோனல் காவல்துறையின் தகவலின்படி, 74 வயதான அவர் ஏரி நடைபாதையில் ஒரு தண்டவாளத்தில் தடக்கி தவறி விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த பெண்ணை ஏரியில் இருந்து மீட்டதாக டிசினோ கன்டோனல் போலீசார் திங்கள்கிழமை அறிவித்தனர்.
கீழே விழுந்ததில் ஜெர்மனியில் வசிக்கும் பெண்ணுக்கு முதலில் தலையில் காயம் ஏற்பட்டு பின்னர் மாரடைப்பு ஏற்பட்டது.
அவசர வானுர்ர்தி மூலம் 74 வயதான பெண்ணை முதலுதவிக்குப் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை என்று போலீசார் தெரிவித்தனர்.
©கீஸ்டோன்/எஸ்டிஏ






