Swiss News In Tamil

மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் மரணம்

மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் மரணம்

மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் மரணம் வெள்ளிக்கிழமை காலை, பேர்ன் மாகாணத்தின் வெங்கனில் மரத்தின் கிளைகள் முறிந்து பெண் ஒருவர் மீது வீழ்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

பலத்த காயமடைந்த அந்த பெண் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமைஇ செப்டம்பர் 13, 2024 அன்றுஇ காலை 9:45 மணியளவில், லாட்டர்ப்ரூனென் நகராட்சியிலுள்ள வெங்கனில், ஒரு மரம் பெண் மீது முறிந்து விழுந்ததாக கன்டோனல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

மரத்தின் கிளை
(c) Sympol Image

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவசர சேவைகள் வரும் வரை மூன்றாம் தரப்பினரால் பராமரிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஏர் கிளேசியர்ஸ் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிர் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பலத்த காயமடைந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து மற்றும் மீட்புப் பணிகளுக்காக சாலையின் பாதிக்கப்பட்ட பகுதி மூடப்பட்டது.

பெர்ன் கன்டோனல் காவல்துறையின் அவசர சேவைகளுக்கு கூடுதலாகஇ வெங்கன் தீயணைப்புத் துறையும் பணியில் ஈடுபட்டிருந்தது. பெர்ன் கன்டோனல் போலீசார் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

Related Articles

Back to top button