Swiss News In Tamil

சூரிச்சில் இளைஞனிடம் வழிப்பறி கொள்ளை : மூவர் தாக்குதல்

சூரிச்சில் இளைஞனிடம் வழிப்பறி கொள்ளை : மூவர் தாக்குதல்

சூரிச்சில் இளைஞனிடம் வழிப்பறி கொள்ளை : மூவர் தாக்குதல் வெள்ளிக்கிழமை மாலை சூரிச் மாகாணத்தின் வெட்சிகோன் (Wetzikon) இல் 26 வயது இளைஞன் ஒருவரை இடித்துத் தள்ளிவிட்டு,  மூன்று நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டார்.

தள்ளிவிடப்பட்ட இளைஞன் தலையில் பலத்த காயம்  காயமடைந்து தானாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.

சூரிச்சில்

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,  26 வயதான சுவிஸ் வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​மூன்று நபர்களால் தாக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். பின்னர் அவர் சுயநினைவை இழந்தார்.

மீண்டும் கண்விழித்தபோது, ​​அவரை தொடர்ந்து அடித்து, செல்போன், கைக்கடிகாரம், பணப்பையை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் தப்பி ஓடிவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சுவிஸ்ஜெர்மன் மொழி பேசும் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

கடுமையான இந்த வன்முறைக்குற்றத்திற்காக போலீசார் மற்றும் வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button