Swiss News In Tamil
ஜெனீவா மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி
ஜெனீவா மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி
ஜெனீவா மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி சுவிஸ் மாகாணமொன்றில், குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டில் சற்று அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது.
குறைந்தபட்ச ஊதியம், பணவீக்கம் காரணமாக, குறைந்த அளவிலேயே அதிகரிக்க உள்ளது.

அதாவது, ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம், 16 செண்ட்கள் அதிகரித்து 24.48 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர இருக்கிறது.
ஆனால், இந்த ஊதிய உயர்வு, 18 வயதுக்குக் கீழுள்ள கோடை காலப்பணி அல்லது பணி பயிற்சி பெறுவோருக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.





