வாலிஸ் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
வாலிஸ் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
சனிக்கிழமை நண்பகல், வாலிஸ் மாநிலத்தில் உள்ள ஓபர்அலெட்ச் பனிக்கட்டித் திடலில் (Oberaletschgletscher), Fusshörner மலைப்பகுதியில், ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வாலிஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கண்முன்னே நடந்த அதிர்ச்சி – பயணியின் சாட்சியம்
ப்ளிக் («Blick») பத்திரிகைக்கு பேசிய ஒரு நேரடி சாட்சியாளர், சம்பவத்தின் போது தனது மனைவியுடன் அருகிலுள்ள Sparrhorn மலையில் நடைப்பயணத்தில் இருந்ததாக கூறினார்.
“நான் ஹெலிகாப்டர் இறங்கப்போகிறது என நினைத்தேன்… ஆனால் இரு வினாடிகளுக்குள் ஒரு பெரிய சத்தம் கேட்கப்பட்டது. வீடியோ எடுக்கிறதற்குள் அது விழுந்துவிட்டது.” எனவும் அதன்பின்னர்
“ஒரு பெரிய புகைமூட்டம் வானில் எழுந்தது. அதன் பிறகு ஹெலிகாப்டர் பின்னால் சாய்ந்தது.” என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்தில் – மேலும் விபரங்கள் பின்வரும்
வாலிஸ் கன்டோனல் போலீசார், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அவ்விடத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாக கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
@Kapo VS






