Swiss News In Tamil

லௌசானில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தேர்ர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

லௌசானில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தேர்ர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

லௌசானில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தேர்ர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு லௌசான் மேற்கில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த 19 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரம், இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3 ஆக அதிகரித்துள்ளது.

READ ALSO THIS  :_ஷாப்பிங் சென்டரின் கட்டுமானப்பணி விபத்து : இருவர் உயிரிழப்பு

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குறைந்தது 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பலர், சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

லௌசானில்

எனினும், நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக இன்னும் இறுதியான தீர்மானத்துக்கு வரவில்லை என்று வோட் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், 4 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மூலம் – zueritoday

Related Articles

Back to top button