Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் இயற்கை பேரிடர்களை அறிவிக்க புதிய உத்தி.!!

சுவிட்சர்லாந்தில் இயற்கை பேரிடர்களை அறிவிக்க புதிய உத்தி.!!

சுவிட்சர்லாந்தில் இயற்கை பேரிடர்களை அறிவிக்க புதிய உத்தி.!! இயற்கை பேரிடர்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க சுவிட்சர்லாந்து ஒரு உத்தியை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் இயற்கை பேரழிவுகள் குறித்து மக்களை எச்சரிக்க சுவிட்சர்லாந்து செல் ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாததால், அது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு அண்மையில் எழுந்திருந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கம் ஒரு புதிய உத்தியை உருவாக்கி வருவதாகவும் மக்கள் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டது .

சுவிட்சர்லாந்தில்

அறிமுகப்படுத்தப்படும் பல நடவடிக்கைகளில் ஒன்று செல்லுலார் ஒளிபரப்பு ஆகும். இது சம்பந்தப்பட்ட பகுதியில் இருக்கும் அனைத்து மொபைல் போன்களுக்கும் குறுந்தகவல்களை அனுப்புவதை சாத்தியமாக்குகிறது.

குறிப்பாக சுவிட்சர்லாந்தின் சில பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதன் தேவை சமீபத்தில் தெளிவாகியுள்ளது.

அதே நேரத்தில், சைரன்கள் மற்றும் அலர்ட்ஸ்விஸ் ஆப் உள்ளிட்ட தற்போதுள்ள எச்சரிக்கை அமைப்புகள் நவீனமயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button