Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து மக்கள் முதலீடுகளைவிட சேமிப்பிற்கு முன்னுரிமை

சுவிட்சர்லாந்து மக்கள் முதலீடுகளைவிட சேமிப்பிற்கு முன்னுரிமை

Moneyland நுகர்வோர் தளம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வின் படி, சுவிட்சர்லாந்து மக்களின் பெரும்பாலானோர் பணத்தை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க விரும்புவதாக தெரியவந்துள்ளது.. இது வியக்கத்தக்கதல்ல, ஏனெனில் சுவிஸ் மக்கள் பெரும்பாலும் தங்கள் சொத்துக்களை கவனமாக மற்றும் பாதுகாப்புடன் கையாள்வது பரிச்சயமானது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 82% பேர் தங்களது செல்வத்தின் ஒரு பகுதியை தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வைத்திருப்பதாகவும், 79% பேர் சேமிப்பு கணக்குகளில் பணம் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்து மக்கள்

வங்கிக் கணக்குகள் குறைந்த வட்டி அளிக்கும் போதிலும், மூன்றில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான முதலீட்டுக்குப் பணத்தை வைத்திருக்க விரும்புகிறார்கள்.  “அவசர நிதி நிலமைகள் ஏற்படும் போது சேமிப்பு கணக்கில் போதுமான பணம் வைத்திருப்பது நல்லது” என moneyland.ch இன் முதலீட்டு நிபுணர் டான் அர்னர் கூறுகிறார்.

இந்த ஆய்வு சுவிட்சர்லாந்து மக்களின் பணம் சேமிப்பை முன்னிலைப்படுத்தும் பழக்க வழக்கத்தை வலியுறுத்துகிறது. அவர்கள் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்த்து, நிதி பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் முக்கியமாக கருதுகிறார்கள்.

மொத்தத்தில், சுவிட்சர்லாந்து மக்கள் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் குறைந்த ஆபத்துடைய முதலீடுகளை முன்னுரிமை அளித்து, அவசர தேவைகளுக்காக பணத்தை எப்போதும் வைத்திருக்க விரும்புகின்றனர் என்பதைக் காட்டும் இது ஒரு முக்கியமான ஆய்வு இதுவாகும்.

Related Articles

Back to top button